353
யாழ்ப்பாணத்தில் நோயாளர்களின் நலன்களை பேணும் முகமாக அமைப்பொன்று உதயமாக உள்ளது. யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு குறித்த அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் , நிர்வாக தெரிவும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ தவறுகளால் மரண சம்பவங்கள் , அவய இழப்புக்கள் என்பன ஏற்பட்டு வரும் நிலையில் நோயாளிகளின் நலன்களை பேணும் முகமாகவும் , அவர்களுக்கு குரல் கொடுக்கும் முகமாகவும் இந்த அமைப்பு செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Spread the love