தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் ‘தேசியப் பாடசாலைகளைக்குப்’ பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்’ என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பர்கர் என ஒவ்வொரு சமூகத்தினரும் இணைந்து கற்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும், இவ்வாறானதொரு மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படுத்துவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில அரசியல்வாதிகள் கதிர்காமம் சென்று கணதேவியையும்,கடவுளையும்,
விஷ்ணுவையும் வழிபட்டு விட்டு வடக்கே சென்று கோவில் கட்டுவது கூடாது எனக் கூறிக்கொண்டு இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாகவும், இதற்கு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் கம் உதாவ நிகழ்ச்சியில் குறிப்பிட்டளவு பதில் வழங்கி ஒவ்வொரு கிராமத்திலும் விகாரை, கோவில், பள்ளிவாசல் என நிர்மானிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இனம், மதம் என பிளவுபட்டு நிற்பதை விட அனைத்து இன, மதத்தினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும், அனைவரின் மதம், கலாச்சாரம் மற்றும் இனத்தை மதிக்கும் சர்வ மத, சர்வ இன தேசியம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முதுகெழும்பை நேராக வைத்துக் கொண்டு ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பேச வேண்டும் என்றும், இந்த வங்குரோத்து நிலையிலிருந்து வெளியே வரும்போது இனவாதம், மதவாதம், தீவிரவாதம் போன்றவற்றை விட்டொழிய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.