407
யாழ்ப்பாணம் – அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில் கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
பொன்னாலை சந்தியில், நாளைய தினம் காலை 09 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்திற்கு பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love