330
இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட தமிழீழ புலிகளின் சின்னத்தை முச்சக்கரவண்டியில் ஒட்டிய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மாத்தளை கந்தேநுவர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (10.12.23) பதிவாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஜா எல பிரதேசத்தில் உள்ள எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் பணியாற்றியவர் எனவும் விடுமுறைக்காக மாத்தளையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும் கந்தேநுவர காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love