செல்லையா சிவநாயகம் அவர்கள் உள்@ர் புலமைமரபின் வலுவான கண்ணிகளில் ஒருவர். கூத்து, சடங்கு என்பவற்றில் அவரது தாடனம் மதிக்கப்படுவது. கூத்து, சடங்கு சார்ந்த தளங்களில் முன்னின்று இயங்குபவராகவும், ஆற்றுப்படுத்துபவராகவும் அவரது பணி கற்றலுக்குரியது.
செ.சிவநாயகம் அவர்கள் மேற்படி விடயங்கள் சார்ந்து படைப்பாளராகவும், ஆய்வாளராகவும், கட்டுரையாளராகவும், கருத்துருவாக்குபவராக-வும் மிகவும் வலுவான பங்களிப்பை செய்திருப்பவர். அவரது ஆக்கங்கள் முனைவர்பட்ட ஆய்வொன்றிற்கு உரியதாக இருந்துவருவது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது.
உள்@ர்ச் சிந்தனை மரபு என்பது ஆதிக்க நீக்க நோக்கிலான புதிய சிந்தனை மரபுகளுடனான ஊடாட்டத்திலும் நவீன சிந்தனை மரபு என்ற பெயரில் காலனிய ஆதிக்க சிந்தனை மரபுகளுடனான ஊடாட்டத்திலும் எத்தகைய எதிர்வினையை ஆற்றியிருக்கிறது, ஆற்றிவருகிறது என்பதை விளங்கிக்கொள்வதற்கும், விளக்குவதற்குமான மிகப்பொருத்தமான ஆளாகவும் ஆளுமையாகவும் செ.சிவநாயகம் அவர்கள் விளங்குவது குறிப்பிடப்பட வேண்டியது.
நவீன ஆய்வறிவுப் பரப்பில் உள்@ர் அறிவு திறன் சார்ந்த ஆற்றல்களும் ஆளுமைகளும் பண்பாட்டுச் சிதைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு புறம்தள்ளப்பட்டுள்ளமையே இந்த 21ஆம் நூற்றாண்டு வரை தொடர்கதையாக இருக்கின்றது.
நவீனம் என்ற பெயரில் காலனிய ஆதிக்கம் தமது ஆதிக்க மற்றும் வணிகத்தின் நிலைத்து நிற்பிற்கு சவாலான உள்@ர் அறிவு முறைகளை விஞ்ஞான பூர்வமற்றவை, பாமரத்தனமானவை எனப் பலவகைகளிலும் சிதைப்பிற்கு உள்ளாக்கி, அது சார் ஆளுமைகள் என முத்திரை குத்திக் கீழ்நிலைப்படுத்தி, அக்கீழ்நிலைப்படுத்தும் கைங்கரியத்தை எம்மீது திணித்து, நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் அவர்களது நிலைத்து நிற்கும் ஆதிக்க நோக்கிலான கல்வி முறையைக் கொண்டாடி வருபவர்களாக இருக்கிறோம்.
அதேவேளை தொன்மையான வரலாறு கொண்டவர்களென அறிவுபூர்வ அகழ்வாய்வு நிறமூர்த்த வழி ஆய்வுவழி அறிந்து, அறிவித்து கொண்டாடும் தழிழர் சமூகங்களின் நவீன அறிவு முறை சூழலுக்குள் கல்வி நிறுவனங்களுக்குள் அடுக்கப்படாதவையாக விலத்தி வைக்கப்பட வேண்டியவையாக தீண்டத்தகாதவையாகவே ஆயிரம் ஆண்டு கால வரலாறுகள் கொண்டதும் நடைமுiயில் இன்றளவும் இருந்து வருவதுமான உள்@ர் அறிவு முறைகள் கணிக்கப்பட்டும் கையாளப்பட்டும் வருகின்றன.
நாங்களே எங்களது அறிவு முறை, எங்களது மொழி சார்ந்து புற மொழிக்கும் அல்லது விலத்தி வைக்கும் அல்லது அகற்றிவிடும் கொள்கையுடையவர்களாக வடிவமைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றோம்.
21ம் நூற்றாண்டில் நிலைபேறுடையதும் ஆதிக்க நீக்கம் பெற்றதுமான வாழ்வை உருவாக்குவதற்கான அறிவுசார் இயக்கத்தில் மேற்படி விடயம் உரத்து உடையாடப்பட வேண்டியதும், மாற்றத்திற்கான செயற்பாடுகள் பரவலாக்கமும் வலுவாக்கவும் பெறவேண்டியது அடிப்படைத் தேவையாகும்.
இதற்குப் பல்வேறு துறைகள் சார்ந்தும் செ.சிவநாயகம் போன்ற உள்@ர் ஆளுமைகளை அறிதலும், உரையாடுதலுக்கு கொண்டு வருதலும் அடிப்படையானதாகும்.
உள்@ர் அறிவு முறைகளின் அதிகாரக் குரல்களாக தம்மை முன்னிறுத்தி அனுகூலங்களை கறந்து கொள்ளும் நவீன ஏட்டுச் சுரக்காய் ஆட்கள் இதற்கு எதிராக இயங்குவது எதிர் கொள்ளப்பட வேண்டியது.
கூத்து சார்ந்து இந்த விடயம் பல சவால்கள், தனிப்பட்ட பாதிப்புக்கள் கடந்து நிலைநிறுத்தப்பட்டதாயிற்று. சடங்குகள் சார்ந்து உள்@ர் பூசாரிகளின் குரலும், இடமும் வலுவாக்கப்பட்டிருக்கின்றது. கூட்டு உரையாடல் செயற்பாடுகளுக்கு ஊடாக மேற்படி அறிவு முறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மீளுருவாக்கம் (Reformulation)) கூத்து சார்ந்து கூத்து மீளுருவாக்கமாக பரிணமித்திருக்கிறது. அவ்வாறு பல்வேறு துறைகள் சார்ந்தும் மீளுருவாக்கச் செயற்பாடுகளும் முன்னெடுப்புக்களும் பிரதேசந்தழுவிய, தேசந்தழுவிய, உலகந்தழுவிய வலைப்பின்னல்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உள்ளக சவால்கள் கடந்து கூத்து சடங்கு என்பவை கிழக்கின் உயர்கல்வி நிறுவனங்களுள்நிலைபெற்று முன்னெடுக்கப்பட்டுவரினும் ஏனைய துறைகள், பீடங்கள் சார்ந்து உள்@ர் அறிவு முறைகள் விலக்கி வைக்கப்பட்டவையாக அல்லது அறியவேபடாத, அறியத்தேவையில்லாத விடயமாகவே மிகவும் உறுதியாக இருந்து வருவது காலனியத்தின் வலிமையை உணரவும் அறியவும் வைப்பதாக இருக்கின்றது.
இதை Epistemic Apartheid (அறிவுசார் நிறவெறி) என்று கூறுவது மிகவும் பொருந்துவதாக இருக்கும். எங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை விரும்பி ஏற்பதும்; எம்மில் நாங்கள் தங்கி வாழ்வதை விலக்கி வைப்பதுமான சூழல் எந்தவிதமான கொண்டாட்டத்திற்கு உரியது?! எந்தவிதமான பெருமித்ததிற்கான உரியது?!
இத்தகைய மிகவும் உணர்திறனுடைய, விடுதலை நோக்குடைய அறிவியல் இயக்கத்தில் பங்காளராக இயங்கும் பல்வேறு ஆளுமைகளில் செ.சிவநாயகத்தின் இருப்பும், இயக்கமும் முன்னுதாரணமானதும்: ஆய்வுக்குரியதும் ஆகும். இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்க பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு (Participatory Action Research) தொல் குடிகளின் ஆய்வு முறைகள் (Indigenous Research Methodologies) ஆய்வாக ஆற்றுகை (Performance as Research) ஒடுக்கப்பட்வர்களுக்கான ஆய்வு முறைகள் (Methodologies of the Oppressed) பெண்ணிலைவாத ஆய்வு முறைகள் (Feminist Research Methodologies) என பல வகையான ஆய்வு முறைகளும் எண்ணக்கருக்களும் உள்வாங்கப்பட்டு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சார்ந்து செ.சிவநாயகம் அவர்களது விரிவான நேர்காணல் செய்யப்படாதது பெரும் குறையே ஆகும். அவரது அபரிவிதமான எழுத்துக்கள் மூலமாக இவற்றைக் கண்டடையலாம் என்பது ஆறுதலாகும்.
அனைத்துத் துறைகள் சார்ந்தும் உள்@ர் மரபுகளின் ஆளுமைகளுடன் இணைந்த அறிவுப் பயணம் என்பது நிலைத்து நிற்கும் வாழ்விற்கு அவசியம் என்பது அறியப்பட வேண்டியது. இந்த வகையில் செ.சிவநாயகம் அவர்களை நினைவுகூறுதல் விடுதலைக்கான அறிவுருவாக்க முன்னெடுப்பின் அம்சமாக இருக்கும்.
பேராசிரியர்.சி.ஜெயசங்கர்.