465
திடீர் சுகவீமுற்ற பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த ம. துசிந்தினி (வயது 26) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளின் போது , கடந்த 03ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதாகவும் , 11ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை , உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்திய ஆலோசனைகளை கட்டாயம் பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love