Home இலங்கையாழில். பெண்ணொருவர் உயிரிழப்பு – மூளைக் காய்ச்சல் என சந்தேகம்

யாழில். பெண்ணொருவர் உயிரிழப்பு – மூளைக் காய்ச்சல் என சந்தேகம்

by admin

 

திடீர் சுகவீமுற்ற பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த ம. துசிந்தினி (வயது 26) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.   யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
இறப்பு விசாரணைகளின் போது , கடந்த 03ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதாகவும் , 11ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை , உயிரிழந்த பெண்ணின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்திய ஆலோசனைகளை கட்டாயம் பெறுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More