376
யாழ்ப்பாணத்தில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கரவெட்டி வதிரி பகுதியை சேர்ந்த நேசராசா அன்ரன் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 09ஆம் திகதி இடம்பெற சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் கோண்டாவில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற வேளை , அவர் வீட்டுக்கு பாதுகாப்பாக வீட்டில் இருந்துள்ளார்.
அவ்வேளை வீட்டிற்கு வந்த அவரது மருமகன் (சகோதரியின் மகன்) அவருடன் முரண்பட்டு அவரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். சத்தம் கேட்டு அயலவர்கள் வந்து பார்த்த போது , தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமுற்று இருந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பாவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ReplyReply allForward
|
Spread the love