310
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் என வடமாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், காவல் நிலையங்களில் காணப்படும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் அறிவித்தல்களை வழங்க முடியும். மேலும், சுற்றுசூழல் பாதுகாப்புக்கான காவல்துறை உத்தியோகஸ்தர்களையும் கிராமிய மட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும் என தெரிவித்தார்.
Spread the love