384
யாழில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி அல்வாயை சேர்ந்த வள்ளி சின்னத்தம்பி (வயது 61) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 11ஆம் திகதி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்தவரை வீதியில் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் – பொன்னாலை மற்றும் பலாலி ஆகிய பகுதிகளை சேர்ந்த இரு முதியவர்கள் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love