2019 ஆம் ஆண்டு காவல்துறைபோதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட 107 கிலோ ஹெரோயின் போதைப் பொருள் நேற்று (14) புத்தளம் பாலாவி “இன்சி” சிமெந்து தொழிற்சாலை வளாகத்தில் புத்தளம் மாவட்ட நீதவான் மிஹில் சிரந்த சத்துருசிங்கவின் முன்னிலையில் உலையில் போட்டு எரித்து அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழிக்கப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் 107 கோடி ரூபா பெறுமதியுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருளுடன் 07 ஈரானிய பிரஜைகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது