குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியை சேர்ந்த 41 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த 07ஆம் திகதி மது போதையில் வீட்டுக்கு சென்ற கணவர், மனைவியுடன் முரண்பட்டுள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்று, மீண்டும் வீட்டுக்கு திரும்பிய போது, மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றி, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சனிக்கிழமை (16.12.23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.