மியன்மாரில் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த தீவிரவாத குழுவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.
மியன்மாரின் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடா்பான செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் தொடர்பாக மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.