Home இலங்கை ஜனாதிபதி – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதி – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

by admin

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு  இன்று ஜனாதிபதி  செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது நல்லிணக்கம்  ,காணி, மீள் குடியேற்றம், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில்   கலந்துரையாடப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், எஸ்.ராசமாணிக்கம், ஜீ.கருணாகரன்,டீ கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆர்.இம்.சீ.எம்.ஹேரத், சுற்றாலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.பீ.பீ.ஹேரத் உள்ளிட்டவர்களும் நல்லிணக்கம் தொடர்பிலான நிறுவனங்களின் பிரதானிகளும் கலந்துகொண்டுள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More