853
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் , ஒரு தொகை பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள கடை ஒன்றினை கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை கடையை உடைத்து உள் நுழைந்த கொள்ளை கும்பல் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சுமார் 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது.
இது தொடர்பில் கடை உரிமையாளர் நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love