304
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் 08 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் காவற்துறையினருக்கு பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது செய்து சோதனையிட்ட போது அவரது உடைமையில் இருந்து 08 கிராம ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்த காவற்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையில் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளில் 08 கிராம் ஹெரோயினே அதிக எடையானது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love