714
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் சனிக்கிழமை (23.12.23) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Spread the love