477
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (31.12.23) வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது.
துன்னாலை வடக்கை சேர்ந்த 21 taJila யோகராசா திலக்சன்எனும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உணவகத்தில் இளைஞன் வேலை செய்து கொண்டிருந்த வேளை உணவகத்தினுள் அத்துமீறி வாள்களுடன் புகுந்தவர்கள் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love