309
தலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான 7.70 கிலோ கடத்தல் தங்கம் திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் தங்கச்சிமடம் அடுத்த தர்கா பேருந்து நிலையம் அருகே வைத்து நேற்று வியாழக்கிழமை(4) இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை திருச்சியில் உள்ள மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
Spread the love