வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை சந்திப்பதற்கு ஜெனிற்றா சென்றுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அல்ல. ஜனாதிபதியை சந்தித்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதியை கேட்பதற்காகவே அங்கு சென்றார். ஆனால் காவல்துறையினர் அங்கு நின்ற பெண்களுடன் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட விதத்தை ஏற்க முடியாது. நாங்கள் எமது உறவுகளின் நீதிக்காகவே 14 வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறோம்.
இது உலக நாடுகளுக்கு காட்டுவதற்கான கண்துடைப்பு . இதன் மூலம் அவர் வட மாகாணத்திற்கு சென்று தமிழ் மக்களை சந்தித்து கலந்துரையாடினேன். அங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று உலகை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட ஒரு தந்திர செயல் ஜனாதிபதி வவுனியாவிற்கு வருகை தந்தது.
சம்பவத்தில் பொதுமக்களிடம் ஆண் பெண் காவல்துறையினர் அத்துமீறி நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்குரியது. உலக நாடுகள் இதை வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறது.