Home உலகம் பிரபல ஹாலிவுட் நடிகர்     மகள்களுடன்  விமானம் விபத்தில் உயிாிழப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர்     மகள்களுடன்  விமானம் விபத்தில் உயிாிழப்பு

by admin

 

தனது இரு   மகள்களுடன் தனி விமானத்தில்   சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஓலிவர் (Christian Oliver) விமானம் விபத்துக்குள்ளானதில்     உயிாிழந்துள்ளாா். . தி குட் ஜெர்மன், ஸ்பீடு ரேஸர் உள்ளிட்ட படங்களில் கிறிஸ்டியன் ஓலிவர் நடித்துள்ளார் .

ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டியன் ஓலிவர் ஹாலிவுட் படங்களில் துணை நடிகராக நடிக்க ஆரம்பித்து  பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார். 51 வயதான இவர் தனது இரு   மகள்களுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கரிபியன் தீவுகளுக்கு சென்ற வேளை   அவா்கள் சென்ற  குட்டி விமானம் திடீரென  விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவரது இரு மகள்களான மடிட்டா (10 வயது), அனிக் (12 வயது) ஆகியோரும் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.  கிறிஸ்டியன் ஓலிவர்  தனது மனைவி ஜெஸிகா மஸூரை கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், தனது மகள்களுடன் மட்டும் தனித்தீவுக்கு விடுமுறையை கொண்டாட சென்ற  லேளையிலேயே   விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்.பிடத்தக்கது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More