400
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என PAFFREL அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கை பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பானர் ரோஹன ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் ரோஹன ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
Spread the love