ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் இன்று மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.29 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஹோன்ஷூவின் மேற்கு கடற்கரை அருகே 46 கிலோமீட்டர் ஆழத்தில் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. 7.6 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலுமான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்த நிலையில் அதன்போது, 200 பேர் உயிரிழந்ததுடன், 559 பேர் காயமடைந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது