Home இலங்கைகப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம்

கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம்

by admin

 

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் இன்றைய தினம்செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது, பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தலில் பண்டிதரின் குடும்பத்தினர், யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உள்ளிட்ட போராளிகள் வீர சாவடைந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More