Home இலங்கை பெண் ஊழியர் கொலை – சந்தேக நபர் விமான நிலையத்தில் கைது!

பெண் ஊழியர் கொலை – சந்தேக நபர் விமான நிலையத்தில் கைது!

by admin

கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில், சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் ஊழியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ காவற்துறையினர் தெரிவித்துள்ளனனர்.

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பிலியந்தலை, மடபட ஜம்புரலிய பிரதேசத்தில் வசிக்கும், ஒரு பிள்ளையின் தாயான துலாஞ்சலி அனுருத்திகா, வைத்தியர் ஒருவரின் மனைவியாவார்.

கொலைக்கு பின்னர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக சந்தேகநபர் விமான நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரன் மற்றும் போதைப்பொருள் வியாபாரி என தெரிவிக்கப்படுகிறது. இதயைடுத்து சந்தேகநபருக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்ய பயன்படுத்திய கூரிய ஆயுதங்கள் மற்றும் அதற்கு பயன்படுத்திய கார் என்பன தொடர்பில் காவற்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More