353
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து 90 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை காவல்துறை அதிரடி படையினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போது வீட்டில் இருந்து 35 பொதிகளில் இருந்து சுமார் 90 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். அதனை அடுத்து குறித்த வீட்டில் வசித்து வந்து நபரை கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சாவையும், கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் காவல்துறையினரிடம் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love