312
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நுணாவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது 129 இடங்கள் டெங்கு பரவுவதற்கு ஏதுவான இடங்களாக இனம் காணப்பட்ட நிலையில் , 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டது. ஏனையவர்களுக்கு துப்பரவு செய்தவற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love