423
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே காவல்துறையி காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை காவல்துறையினரின் காவலரண் மீது நேற்றைய தினம் புதன்கிழமை இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்ற இருவரை காவல்துறையினர் துரத்தி சென்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் , அண்மையில் மண்டைதீவு காவலரணில் வைத்து நபர் ஒருவரை காவல்துறையினர் போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர். அந்த சம்பவத்திற்கு பழிவாங்கவே காவலரண் மீது தாக்குதல் நடாத்தியதாக சந்தேகநபர் தெரிவித்ததாகவும், தொடர்ந்தும் இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் காவல்துறை காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love