428
வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி சி.ஜெனிற்றா இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியாவிற்கு போது நீதிமன்ற கட்டளையினை மீறியதாக சி.ஜெனிற்றா வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட அவா் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சி.ஜெனிற்றா ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டுள்ளாா்.
Spread the love