ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் கடற்கரையில் அமெரிக்காவிற்கு சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க இராணுவக் கட்டளையின் படி, Gibraltar Eagle என்ற குறித்த கப்பலில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஏடன் வளைகுடாவில் கப்பல் தனது பயணத்தை தொடர்கிறது.
ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தாக்கப்பட்ட கப்பல் உருக்கு இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்றதாகவும் அது தாக்கப்பட்ட போது ஏடன் வளைகுடாவில் சுமார் 160 கிலோமீட்டர் வரை சென்றிருந்ததாகவும் Eagle Bulk Shipping கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.