314
உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை சுயதொழில் முயற்சியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில், மாவட்டத்தில் சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி சுயதொழில் முயற்சியாளர்களின் சுயபொருளாதாரத்தினை வலுப்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்துவதற்கு ஏதுவான விடயங்கள் ஆராயப்பட்டன.
அதன் போது, சுயதொழில் முயற்சியாளர்கள் தாம் எதிர் நோக்கியுள்ள தொழில்சார் நடைமுறை பிரச்சினைகளையும் மற்றும் வங்கிகள் ஊடக கடன் வசதிகளை பெற முற்படும் போது ஏற்படும் இறுக்கமான நடைமுறைகளால் ஏற்படும் தாமதங்கள் குறித்து தெரிவித்திருந்தனர். தற்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போது,
உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை எதிர்பார்க்கின்ற சுயதொழில் முயற்சியாளர்கள் அதற்கான திட்ட முன் மொழிவுகளை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதற்கான ஒத்துழைப்பினையும் வழிகாட்டல்களையும் வழங்க முடியும்
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முற்சிகளை ஊக்குவிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து நன்மைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுகளையும் வழங்க முடியும் எனதெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலர், மேலதிக செயலர் , மேலதிக செயலர் (காணி) மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் ,சுயதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள், மற்றும் சுயதொழில் முயற்சியாளர்கள், கலந்துகொண்டி ருந்தனர்
Spread the love