339
பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 61 வயதுடைய போலந்து நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை – தெற்கு காவற்துறைப் பிரிவில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது, போலந்து நாட்டு பிரஜை கடலில் மூழ்கியுள்ள நிலையில் விடுதியின் உயிர் பாதுகாப்பு அதிகாரியால் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love