இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
வாக்கெடுப்புகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சிறிதரனுக்கு ஆதரவாக 186 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. சுமந்திரனுக்கு 137 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.
இதன்படி 50 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மொத்தம் 321 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதில் கட்சியின் தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா நடுநிலை வகித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் வாக்கெடுப்பை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.