466
கச்ச தீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலர் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில் கச்சதீவு ருடாந்த மகோற்சவம் சிறப்பாக இடம் பெறவுள்ள
இந்நிலையில் குறித்த ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முன்னேற்பாட்டு கூட்டத்தில், இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்துஉட்பட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஏற்பாடுகள் மற்றும் உணவு போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறித்த முன்னாயத்த கூட்டத்தில் யாழ் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலர், நெடுந்தீவு பங்குத்தந்தை, யாழ்மறை மாவட்ட குரு முதல்வர், கடற்படையின் பிராந்திய பொறுப்பதிகாரி காவல்துறைஉயரதிகாரிகள் ராணுவ உயரதிகாரிகள் மற்றும் துறை சார் திணைக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Spread the love