320
கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காவற்துறை ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ இதை தெரிவித்தார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love