சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மடகஸ்கா் அரசு மிக கடுமையான தண்டனையை அறிவித்துள்ளது.
அந்நாட்டின் சட்டத்துறை துறை அமைச்சர் இது தொடர்பாக முக்கிய மசோதாவை கொண்டு வந்துள்ளாா். . இந்த புதிய சட்டத்தின்படி சிறார்களைப் பலாத்காரம் செய்பவர்களுக்கு காஸ்ட்ரேட், அதாவது ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னா் அது மேல் சபையிலும் நிறைவேற்றப்பட்டு , அதிபர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த புது சட்டத்தின்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு கெமிக்கல் காஸ்ட்ரேஷன் செய்யப்படும், சில மோசமான வழக்குகளில் அறுவைசிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , இந்தச் சட்டத்திற்கு பல்வேறு சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாலியல் பலாத்கார குற்றங்களைத் தடுக்க இது சரியான நடவடிக்கை இல்லை என்பது அவர்கள் வாதமாக உள்ளது. இருப்பினும், இதை ஏற்க மறுக்கும் மடகஸ்கர் நாட்டில் உள்ள ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 600 சிறார் பலாத்கார வழக்குகள் நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் லாண்டி ம்போலாட்டியான, இந்தாண்டு ஜனவரி மாதம் மட்டும் 133 பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த புதிய சட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.. 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அறுவை சிகிச்சை அல்லது கெமிக்கல் மூலம் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.. அதேநேரம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு கெமிக்கல் காஸ்ட்ரேஷன் செய்யப்படும்.
காஸ்ட்ரேஷன்: கெமிக்கல் காஸ்ட்ரேஷன் என்பது ஒரு வகை ஆண்மை நீக்கம். இது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். அதேநேரம் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் ஆண்மை நீக்க நடவடிக்கையை மீண்டும் சரி செய்யவே முடியாது. இந்த தண்டனையைத் தான் இப்போது மடகஸ்கர் அரசு கொண்டு வந்துள்ளது. குழந்தைகளைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மடகஸ்கர் அரசு அறிவித்துள்ளது.