பருத்தித்துறையில் மாணவர்கள் மீது வாள் வெட்டு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவர்கள் இருவர் மீது, வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில் காவற்துறையினர் மேலதிக சிவாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி.
யாழ்ப்பாணம் – கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து பக்தர்கள் மற்றும் மதகுருமார் உள்ளடங்களாக 3500 பேரும், இலங்கையில் இருந்து சுமார் 4000 பேரும் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் பாம்புக் கடிக்கு இலக்காகி கர்ப்பிணி பெண் உயிரிழப்பு
திருகோணமலை – மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியில் நேற்று (20.02.24) மாலை பாம்புக் கடிக்கு இலக்கான 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஐவர் படுகாயம்
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு இடையில் ஏற்பட்ட ஏற்பட்ட தகராறு காரணமாக மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக இருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.