பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது ஊரகஹா மைக்கல், புஸ்ஸே ஹர்ஷ மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற மோதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
இதன்போது, 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த 13 பேரும் பெலியத்தவில் கொல்லப்பட்ட ஐந்து பேரின் கொலைக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உதவியாளர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த கைது தொடர்பாக டுபாய் அரசு இதுவரை அதிகாரபூர்வமாக இலங்கை அரசுக்கு அறிவிக்கவில்லை என்ற போதிலும் சந்தேக நபர்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினரும் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.