539
யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை (01.03.24) இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதுடைய பரணிதரன் என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளார். சம்பவம் தொடா்பாக சாவகச்சோி காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனா்.
Spread the love