Home இலங்கை சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியின் சாரதியை கைதுசெய்ய முயற்சி!

by admin

சாந்தனின் பூதவுடலுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில்  இன்று (03.03.24) அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஏ9 வீதியில் மக்கள் ஊர்வலமாக சாந்தனின் பூதவுடல் ஊர்தி அஞ்சலி மண்டபம் வரை எடுத்துச் செல்ப்பட்டது. தொடர்ந்து அஞ்சலிக்காக உடல் டிப்போ சந்தியில் அமைக்கப்பட்ட அஞ்சலி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து மூத்த போராளி “காக்கா” ஈகைச் சுடரை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய உணர்வுக் கொடியை போர்த்தி மலர் மாலை அணிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, முன்னாள் போராளிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து தேசிய உணர்வுக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியின் சாரதியை கைதுசெய்ய முயற்சி!

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03.03.24) காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து காவற்துறையினர் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி அதிகாலை அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டது.

பின்னர் பிரேச பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்த சமயத்தில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையுடன் ஊர்தி அருகே சென்ற வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது.

அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் எனவும் ஊர்தி சாரதியினை வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தமையினால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேரூந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More