431
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எதிர்வரும் 5ஆம் திகதி நாட்டுக்கு திரும்பவுள்ளார் என பெரமுனவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் இருந்தார்.
அவர் நாடு திரும்பியதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love