Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி இலங்கை கடலில் யாழ்.மீனவர்கள் கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்திய கடல் எல்லைக்கு அருகே சென்று மீனவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, நெடுந்தீவு, பலாலி, வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து மீனவர்கள் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்ட படகுகளில் போராட்டத்திற்காக புறப்பட்டுச் சென்றனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகம் இடம்பெறும் கடற்பரப்பை நோக்கி ஊர்காவற்றுறையில் இருந்து மீனவர்கள் போராட்டத்திற்காக இன்று (03.03.24) காலை சென்றனர்.
இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடியை தடுக்குமாறு வலியுறுத்தும் கறுப்புக் கொடி போராட்டத்தில் பலாலி மீனவர்களும் இணைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் படகுகளில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு இலங்கை கடற்பரப்பில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.