403
மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ், ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது.
அதன்படி, இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Spread the love