620
பாகிஸ்தானின் 24 ஆவது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிஃப் பதவியேற்றுள்ளார். ஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிஃப் அல்வி ஷெபாஸ் , ஷெரிஃப்-க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளாா்..
கடந்த மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதனால் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்ததன் அடிப்படையில் கூட்டணி கட்சிகள் இணைந்து ஷெபாஸ் ஷெரிஃப்-ஐ பிரதமராக தெரிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love