கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொட நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்சர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில்கொள்வதில்லை என்றார்.
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டாபய ராஜபக்ச குறிப்பிடுவது நகைப்புக்குரியது.