327
தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்று(14) காலை பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் உடல்களும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.
மேலும் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். உயிரிழந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love