நாடா ளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொழும்பில் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
18 அரசியல் கட்சிகள் மற்றும் முப்பது சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்படும் இந்த புதிய அமைப்புக்கு மனுஷிய ஜனதா சந்தனயா (மனிதநேய மக்கள் கூட்டணி) என பெயரிடப்பட்டுள்ளது.
பல மனித உரிமைகள் சிவில் ஆர்வலர் வழக்கறிஞர்கள் மற்றும் மத அமைப்புகள் மனிதநேய மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அதன் தலைவர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கூட்டணி உருவாக்கப்படுவதாகவும், ஜனாதிபதித் தேர்தலில் கொள்கைகளுக்கு இணங்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எந்தவொரு அரசியல் கட்சியும் அந்தக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்க முன்வராவிட்டால் தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.