312
யாழ் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று சேந்தாங்குளம் கடற்கரையில் நீராட சென்ற மூவரில் காணாமல் போன 37 , 21 வயதான ஆண்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ் – ஆரியகுளம் பகுதியிலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளரும், அங்கு பணிபுரிபவரும், விடுதியில் தங்கியிருந்த விருந்தினர் ஒருவருமே நீராடச் சென்ற வேளையில் இந்த அனா்த்தம் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன் சம்பவம் தொடர்பாக இளவாலை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love