இந்திய இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ் மாவட்ட மீனவர்கள் இன்று யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனா்.
இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தொிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து காவல்துறையினா் மீனவர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்ற போதுட் ம் மீனவர்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தொிவிக்கப்படுகின்றது.