309
தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (31.03.24) யாழில் உள்ள செல்வா சதுக்கத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில், நடைபெற்ற நிகழ்வில் தந்தை செல்வாவின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
Spread the love